/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காரிமங்கலம் போலீஸ்ஸ்டேஷனில் குறைதீர் முகாம்
/
காரிமங்கலம் போலீஸ்ஸ்டேஷனில் குறைதீர் முகாம்
ADDED : மார் 02, 2025 01:45 AM
காரிமங்கலம் போலீஸ்ஸ்டேஷனில் குறைதீர் முகாம்
காரிமங்கலம்:காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள் அளித்து, நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மற்றும் வழக்குகளுக்கு தீர்வு காண சிறப்பு மனு தீர்க்கும் முகாம், மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் உத்தரவின்படி, நேற்று காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் தலைமையில் நடந்தது.
இதில், எஸ்.ஐ.,க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார், மற்றும் எஸ்.எஸ்.ஐ.,க்கள் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, 50 மனுக்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்தனர்.