/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 06, 2026 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தமிழ்நாடு ஹச்.எம்.எஸ்., கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். பேரவை அமைப்பு செயலாளர் முருகானந்தம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
இதில், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் போனசாக, 7,000 ரூபாய் வழங்க வேண்டும். மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம், 6,000 ரூபாய் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

