/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓசூர் ஏ.டி.எம்.,மில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க 10 தனிப்படை
/
ஓசூர் ஏ.டி.எம்.,மில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க 10 தனிப்படை
ஓசூர் ஏ.டி.எம்.,மில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க 10 தனிப்படை
ஓசூர் ஏ.டி.எம்.,மில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க 10 தனிப்படை
ADDED : ஜூலை 08, 2024 05:44 AM
ஓசூர், : ஓசூர் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளை கும்பல், 5 ஏ.டி.எம்., மையங்-களை உடைத்து, 59.50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்-றுள்ளது. கும்பலை பிடிக்க, 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்-ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பாகலுார் சாலையில் என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனியில், ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லாத நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, காஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து, 14.50 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளைய-டித்து தப்பினர். இது தொடர்பாக போலீசார் விசாரணையை துவங்கிய நிலையில், கர்நாடகா மாநிலம் பெல்லந்துார் மற்றும் ஹாசன் பகுதிகளில், இரு ஏ.டி.எம்., மையங்களில், 20 லட்சம் ரூபாய்; ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தில், இரு பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,மில், 25 லட்சம் ரூபாயும் கொள்ளைய-டிக்கப்பட்டது தெரியவந்தது. ஐந்து கொள்ளையிலும் கிடைத்த கைரேகை ஒன்றாக உள்ளது. இதனால் ஒரே கும்பல் கைவரிசை
காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. வடமாநில கும்பலாக இருக்-கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சேலம் டி.ஐ.ஜி., உமா, ஓசூரில் கொள்ளை நடந்த ஏ.டி.எம்., மையத்தை நேற்று மாலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''ஏ.டி.எம்.,மில் கைவரிசை காட்டிய கும்பலை பிடிக்க,
40 போலீசார் கொண்ட, 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் ஓசூரில் நடந்த மூன்று ஏ.டி.எம்., கொள்ளை
சம்பவங்களும் ஒரே மாதிரி நடந்துள்ளது,'' என்றார்.