/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மறியல் செய்த 115 பேர் மீது வழக்கு
/
மறியல் செய்த 115 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 24, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறியல் செய்த 115 பேர் மீது வழக்கு
தர்மபுரி,:தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சி.ஐ.டி.யு., தொழிற் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, சி.ஐ.டி.யு., மண்டல செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், சாலையில் குறுக்கே அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாக, 115 பேர் மீது, தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

