தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விதி மீறிய வாகனங்களுக்கு ரூ.3.41 கோடி அபராதம்

விதி மீறிய வாகனங்களுக்கு ரூ.3.41 கோடி அபராதம்

விதி மீறிய வாகனங்களுக்கு ரூ.3.41 கோடி அபராதம்


ADDED : ஜன 17, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2025 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விதி மீறிய வாகனங்களுக்கு ரூ.3.41 கோடி அபராதம்

தர்மபுரி,:தர்மபுரி மாவட்ட, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்துள்ளதாவது:

தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு, 2024ல் போக்குவரத்து துறை சார்பாக, தர்மபுரி பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் பாலசுப்பரமணியன், பிரேக் இன்ஸ்பெக்டர்கள் தரணீதர், வெங்கிடுசாமி, குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அதில், 19,827 வாகனங்களை தணிக்கை செய்து, 6,621 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. இதில், 725 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.

மேலும், பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக, 5,990 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உயிரிழப்பு மற்றும் விபத்து தொடர்பாக, 92 ஓட்டுனர் உரிமங்கள் மீது தற்காலிக தடை, விதிமீற லில் ஈடுபட்ட, 486 ஓட்டு னர் உரிமங்கள் தற்காலிக தடை செய்யப்பட்டன.

வாகன சோதனையின் மூலமாக, அரசுக்கு சாலை வரியாக, 1.07 கோடி ரூபாய், இணக்க கட்டணமாக, 73.87 லட்சம் ரூபாய் என, 1.81 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. மேலும், வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக, 1.60 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த, 2024ல் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலக செயலாக்க பணிகள் மூலம் அரசுக்கு, 3.41 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பான, 30 கி.மீ.,-க்கு மேல் இயக்கப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து துறை சார்பில், வேகத்தை கண்காணிக்கும் ஸ்பீட் ரேடார் கன் உதவியுடன் கடந்த, 4 ஆண்டுகளில், 14,370 வாகனங்களுக்கு ஆன்லைன் அபராதமாக, 1.09 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us