/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை திருட்டு
ADDED : ஆக 14, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் கதிரேசன், 50; இவர் தர்மபுரி துரைசாமி நாயுடு தெருவிலுள்ள, நகைக்கடையில் பணியாற்றி வந்தார். கடந்த, 11 அன்று மகளின் திருமண பத்திரிகை வைக்க சென்னை சென்றார்.
அவருடைய மகள், வீட்டை பூட்டி விட்டு, உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள், 12ம் தேதியன்று வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த, வைர தோடு, வைர நெக்லஸ் உட்பட, 45 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. புகார் படி தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.