ADDED : ஜன 24, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், : தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 108வது பிறந்த நாளையொட்டி, அ.தி.மு.க., சார்பில், அரூர் கச்சேரிமேட்டில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது.
தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி தலைமை வகித்தார். மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா, தலைமை கழக பேச்சாளர் பாஸ்கரன், எம்.எல்.ஏ.,க்கள் அரூர் சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி ஆகியோர் பேசினர். இதில், மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

