/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அங்கன்வாடி சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 08, 2026 05:02 AM

தர்மபுரி: தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் மதலை முத்து கோரிக்கை விளக்கி பேசினார்.
இதில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதி படி, வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளது போல சிறப்பு பென்ஷன், 6,750 ரூபாய் அகவிலை படியுடன் வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் உள்ளவர்களுக்கு, 19,500 ரூபாய் சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலையில் உள்ளவர்களுக்கு, 15,700 ரூபாய் என்ற அடிப்படையில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும்போது, 10 ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு, 50 சதவீத பணிகளை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.* தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர்கள் பெர்னாட், பார்வதி, பொருளாளர் பொன்னுசாமி, மாநில துணைத்தலைவர் நோயிரா, மாநில செயலாளர் முருகம்மாள் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.

