/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்
/
வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 20, 2024 07:25 AM
பாப்பிரெட்டிப்பட்டி, : கடத்துார் ஒன்றியம், மோட்டாங்குறிச்சி ஊராட்சி, நத்தமேடு கிரா-மத்தில், தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில், கலை-ஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம், ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார் தலைமையில்
நடந்தது. கடத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கனல்-வேந்தன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் கண், பல், காது, எலும்பு, சித்தா, பொது மருத்துவம் உள்ளிட்டவைக-ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் மோகனப்பிரியா, அபிநயா, கிருஷ்ணகுமார், கவின், ஸ்ரீதேவி, சரண்யா, சுகுமார், ஹரி பிரசாத் வனிதா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பரிசோ-தனை செய்து மருந்து மாத்திரை வழங்கினர்.