/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வருவாய் அலுவலர்கள் ஆய்வு கூட்டம்
/
வருவாய் அலுவலர்கள் ஆய்வு கூட்டம்
ADDED : ஆக 31, 2024 12:53 AM
அரூர்: அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமையில், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த வருவாய் சார்நிலை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் தாசில்தார்கள், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள், ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார்கள், மண்டல துணை தாசில்தார்கள், ஆர்.ஐ.,க்கள், தலைமை நில சர்வேயர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு, வீட்டுமனை பட்டாக்கள் வழங்குதல், மக்களுடன் முதல்வர் மனுக்கள், ஜமாபந்தி மனுக்கள், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல், உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் இனங்கள்,
சான்றிதழ்கள் நிலுவை மற்றும் பல்வேறு நிலுவை கோப்புகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.