ADDED : ஆக 19, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், எர்ரனஹள்ளி பகுதியில் நேற்று முன்தினம் கிராவல் மண் கடத்துவதாக, பாலக்கோடு தாசில்தார் ரஜினிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் அவர் அங்கு சென்று பார்த்த போது, கிரவல் மண் ஏற்றி டிப்பர் லாரி வந்துள்ளது. அதை நிறுத்திய போது, அதன் டிரைவர் தப்பியோடினார். லாரியை சோதனை செய்தபோது, 2 யூனிட் அளவிற்கு கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்து, போலீசில் ஒப்ப-டைத்தார். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

