/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்த ஆலோசனை
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்த ஆலோசனை
ADDED : செப் 06, 2024 01:21 AM
தர்மபுரி, செப். 6-
தர்மபுரியில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:
கூட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான முதல்வர் கோப்பை வரும், 10 அன்று முதல் துவங்கி, 24 வரை நடக்கவுள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து, பள்ளி, கல்லுாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க உள்ளனர். இதில், மாவட்டத்தில் முதலிடம் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு, தலா, 3,000 ரூபாய், 2ம் இடம் பெறுவோருக்கு, 2,000 ரூபாய், 3ம் இடம் பெறுவோருக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படும். விழாவில் பங்கேற்க விரும்புவோர் தங்களின், ஆதார், படிப்பு சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகள் தங்களின் அடையாள அட்டையை கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்சியில், சி.இ.ஓ., ஜோதிசந்திரா, கல்வியல் இணை இயக்குனர் சிந்தியாசெல்வி, டி.எஸ்.ஓ., சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.