/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு கேபிளில் ஆபாச படம் விவகாரத்தில் தாசில்தார் தவிப்பு
/
அரசு கேபிளில் ஆபாச படம் விவகாரத்தில் தாசில்தார் தவிப்பு
அரசு கேபிளில் ஆபாச படம் விவகாரத்தில் தாசில்தார் தவிப்பு
அரசு கேபிளில் ஆபாச படம் விவகாரத்தில் தாசில்தார் தவிப்பு
ADDED : மார் 12, 2025 08:00 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், அரசு கேபிளில் இருந்த தனியார் உள்ளூர், 'டிவி' சேனலில் கடந்த, 6 அன்று ஆபாச படம் ஒளிப-ரப்பானது. இதை பார்த்து, மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் மற்றும் தர்மபுரி கேபிள் 'டிவி' தனி தாசில்தார் ராஜராஜனுக்கு தகவல் தெரிவித்ததால், சம்பந்தபட்ட சேனலின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மேலும், ஆபாச படம் ஒளிபரப்பான தனியார் உள்ளூர், 'டிவி' சேனல் குறித்து விசாரித்-தனர்.
இதில், சேலம் மாவட்டம், தாரமங்கலத்திலிருந்து, ஐ.பி., மூலம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட பல மாவட்டங்களிலுள்ள, அரசு கேபிள் 'டிவி' எம்.எஸ்.ஓ.,க்களில் சேனல் ஒளிபரப்பி வந்தது தெரிந்தது. தனியார் சேனல் உரிமையாளர் மீது, நடவடிக்கை எடுக்க, தாசில்தார் ராஜராஜன் தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க சென்றார். அங்கு, சேலம் மாவட்-டத்தில் புகார் அளிக்க போலீசார் அறிவுறுத்தினர். சேலம் மாவட்டத்திலும் புகார் பதிவு செய்யப்படாததால், சம்-பவம் நடந்து, 6 நாட்களாகியும், சேனல் உரிமையாளர் யார் என தெரியவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகாரை பெறாமல் தாசில்தாரை, போலீசார் அலையவிட்டது குறித்து, சென்னை கேபிள் 'டிவி' இயக்குனரகத்திற்கு தெரிவித்த பின், அங்கிருந்த வந்த அழுத்தத்தால், புகார் குறித்து விசாரிப்பதாக, தர்மபுரி டவுன் போலீசார் தெரிவித்துள்ளனர்.