/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
துாய்மை பணியின் போது குவிந்து கிடந்த பிளாஸ்டிக் குப்பையால் கடுப்பான கலெக்டர்
/
துாய்மை பணியின் போது குவிந்து கிடந்த பிளாஸ்டிக் குப்பையால் கடுப்பான கலெக்டர்
துாய்மை பணியின் போது குவிந்து கிடந்த பிளாஸ்டிக் குப்பையால் கடுப்பான கலெக்டர்
துாய்மை பணியின் போது குவிந்து கிடந்த பிளாஸ்டிக் குப்பையால் கடுப்பான கலெக்டர்
ADDED : செப் 18, 2024 07:16 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் சார்பில், இலக்கியம்பட்டி பஞ்., தர்மபுரி எஸ்.பி., அலுவலகம் அருகிலுள்ள, கருவூல காலனியில், துாய்மையே சேவை விழிப்புணர்வு வார விழாவையொட்டி, பணிகளை கலெக்டர் சாந்தி, கூடுதல் கலெக்டர் கவுரவகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி வந்தபோது, மரக்கன்று நடும் இடத்தில், குவிந்து கிடந்த குப்பையால் துர்நாற்றம் வீசியது. பெருமளவில் பிளாஸ்டிக் குப்பை இருந்ததால், கடுப்பான கலெக்டர் சாந்தி, முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள இடத்தில், இவ்வளவு பிளாஸ்டிக் குப்பை ஏன் அப்புறப் படுத்தப்படாமல் உள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா என பஞ்., நிர்வாகம் மற்றும் தர்மபுரி பி.டி.ஓ.,விடம் கடிந்து கொண்டார்.
தொடர்ந்து, மரக்கன்று நடவு, உறுதி மொழி ஏற்பு மற்றும் துாய்மை பணிகளை தொடங்கி வைத்தவுடன், குப்பையை முழுமையாக அப்புறப்படுத்த அறிவுறுத்தி விட்டு, ஒரு மணி நேரம் கலெக்டர் காத்திருந்தார். இனி குறிப்பிட்ட இடத்தில், குப்பையை தேக்கி வைக்கக்கூடாது என, பஞ்., நிர்வாகத்தை அறிவுறுத்தினார். மேலும், 2,000 வீடுகளுக்கு மேலுள்ள இடத்தில், வீட்டுக்கு வீடு குப்பை சேகரிக்கும் பணியை பஞ்., நிர்வாகம் செய்யாததால், குப்பை குவிந்துள்ளதாக, அதிகாரிகளை கடிந்து கொண்டார்.
இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள், குப்பையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில், துாய்மை பணியாளர்களுக்கு கையுறைகள் வழங்கப்படாததால், கலெக்டர் முன்னிலையில், வெறும் கையால் குப்பையை அள்ளிய அவலம் நடந்தேறியது. பல நாட்கள் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்ட நிலையில், தேங்கிய குப்பை நேற்று
அகற்றப்பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

