ADDED : ஏப் 01, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து, நேற்று மாலை பாலக்கோட்டில் துணை முதல்வர் உதயநிதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
முன்னதாக, பாலக்கோடு அருகேயுள்ள கடைமடை ரயில்வே கேட் பகுதியில் சாலையோரம் இருந்த டீ கடையில் உதயநிதி, நிர்வாகிகளுடன் சேர்ந்து டீ குடித்தார். தொடர்ந்து, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சில் பயணிகளிடம், தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து, பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் திறந்தவேனில் பிரசாரம் செய்து பேசினார்.
