ADDED : மார் 03, 2025 01:40 AM
அ நிறம் | அளவு
போச்சம்பள்ளி சந்தையில்ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம்
போச்சம்பள்ளி:ஆடி மாதத்தில் விதைத்து தை, மாசி மாதங்களில், அவரை, துவரை, உளுந்து, பச்சை பயறு உள்ளிட்ட பலவகை தானியங்கள் அறுவடை செய்யப்படுகிறது. கடந்த பிப்., 23 ல் போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு, 100 டன்னிற்கு மேலாக இந்த தானியங்கள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து, 2வது வாரமாக நேற்று கூடிய வாரச்சந்தைக்கு அவரை, துவரை உள்ளிட்ட தானியங்கள் கடந்த வாரம் போல், 100 டன்னிற்கு மேலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
இதை, சேலம் லீபஜார் வியாபாரிகள், திருப்பத்துார் மாவட்ட தானிய வியாபாரிகள் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் என, 2,000க்கும் மேற்பட்டோர் வீட்டு உபயோகத்திற்கும், வியாபாரத்திற்கும் வாங்க குவிந்தனர். இதில், 2.50 கோடி ரூபாய் அளவுக்கு தானியங்கள் விற்பனையாகின.
