/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
4 வழிச்சாலை பணி முடிந்த பின்பேடோல்கேட் திறக்க வலியுறுத்தல்
/
4 வழிச்சாலை பணி முடிந்த பின்பேடோல்கேட் திறக்க வலியுறுத்தல்
4 வழிச்சாலை பணி முடிந்த பின்பேடோல்கேட் திறக்க வலியுறுத்தல்
4 வழிச்சாலை பணி முடிந்த பின்பேடோல்கேட் திறக்க வலியுறுத்தல்
ADDED : மார் 15, 2025 02:24 AM
4 வழிச்சாலை பணி முடிந்த பின்பேடோல்கேட் திறக்க வலியுறுத்தல்
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., சின்னுசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் செயல்படும், தனியார் மரவள்ளி கிழங்கு அரவை ஆலை நிர்வாகம் பீணியாறு கரையை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. பலமுறை குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்தும், அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. அரூரில் இருந்து சேலம் செல்லும் நான்கு வழிச்சாலையில், பல இடங்களில் சந்திப்பு சாலைகள் இல்லாததால், ஒரு வழிப்பாதையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதை தடுக்க முறையாக சந்திப்பு சாலை அமைக்க வேண்டும். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றி வரும் விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். சாமியாபுரம் கூட்ரோட்டில் இருந்து மஞ்சவாடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி முழுமையாக நிறைடைந்த பின்பே, எச்.புதுப்பட்டி டோல்கேட்டை திறக்க வேண்டும். இவ்வாறு பேசினர்.