/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
த.வெ.க.,வினர் 55 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
/
த.வெ.க.,வினர் 55 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
ADDED : பிப் 02, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.வெ.க.,வினர் 55 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
தொப்பூர்:தர்மபுரி மாவட்ட, த.வெ.கா.,விற்கான புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில், நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, பாளையம் சுங்கச்சாவடி அருகே, த.வெ.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என, 9க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து கூடினர். போலீசார் எச்சரித்தும் தடையை மீறி, அங்கேயே காத்திருந்தனர். தொப்பூர் எஸ்.ஐ., பிரபாகரன் புகார் படி, மாவட்ட செயலாளர் உட்பட, 45 ஆண்கள், 10 பெண்கள் மீது, தொப்பூர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.