sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆமை வேகத்தில் ஏ.பள்ளிப்பட்டி - மஞ்சவாடி 4 வழிச்சாலை பணி அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி

/

ஆமை வேகத்தில் ஏ.பள்ளிப்பட்டி - மஞ்சவாடி 4 வழிச்சாலை பணி அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி

ஆமை வேகத்தில் ஏ.பள்ளிப்பட்டி - மஞ்சவாடி 4 வழிச்சாலை பணி அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி

ஆமை வேகத்தில் ஏ.பள்ளிப்பட்டி - மஞ்சவாடி 4 வழிச்சாலை பணி அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி


ADDED : ஆக 10, 2024 07:01 AM

Google News

ADDED : ஆக 10, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி:: ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி கணவாய் வரை, 4 வழிச்-சாலை பணி ஆமை வேகத்தில் நடப்பதால், அடிக்கடி போக்கு-வரத்து நெரிசல் ஏற்படுவதால், பொது மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி முதல், சேலம் அயோத்-தியாப்பட்டணம் வரை, 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக வாணியம்பாடி முதல், அரூர் - ஏ.பள்ளிப்பட்டி வரை, 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடக்கிறது.

இவ்வழியாக தினமும், 1,000க்கும் மேற்பட்ட பஸ், லாரி உள்-ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதையடுத்து ஏ.பள்-ளிப்பட்டி முதல், மஞ்சவாடி கணவாய் வரை சாலையை விரிவுப-டுத்தி, 4 வழிச்சாலை அமைக்க, மத்திய அரசு, 170 கோடி ரூபாய் ஒதுக்கியது. சாலை அமைக்கும் பணி கடந்த, 3 மாதங்களாக நடக்கிறது.

அதற்காக சாலையில் புதிய பாலங்கள் அமைத்தும், சாலை அக-லப்படுத்தும் பணியும் நடக்கிறது. இப்பணிக்காக தார்ச்சாலை தோண்டப்பட்டு மண் கொட்டப்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மழை பெய்தால் சாலையில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்-சியளிக்கிறது. சில சமயங்களில் லாரிகள் சேற்றில் சிக்கிக் கொள்-கிறது. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இதனால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய நிலை உள்ளது. இது போன்று தினமும் போக்குவரத்து பாதிப்பால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சாலை அமைக்கும் பணியை துரிதபடுத்த வேண்டும்.

.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி வரை, நான்கு வழி சாலை அமைக்கும்பணி நடந்து வருகிறது.இதற்காக ஆங்காங்கே சாலையில் கல்வெட்டு-களும், பாலமும் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு பணி நடக்கிறது.இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாக-னங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. இதனால் சாமியாபுரம் கூட்ரோட்டில் இருந்து சேலம் செல்ல இரண்டு மணி நேரத்திற்கு மேலாகிறது. இதனால் வணிகர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, உடனடியாக சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தென்னரசு, நகர வணிகர் சங்க செயலாளர், பாப்பிரெட்டிப்-பட்டி.

அரூர் -சேலம் நெடுஞ்சாலையில் ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்ச-வாடி வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணி நடக்கிறது.இதற்-காக பழைய தார் சாலை தோண்டி எடுத்து புதிய தாக மண்-கொட்டி சமன் செய்தும், பாலங்கள் கட்டும் பணி நடக்கி-றது.இந்த பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.இதனால் சேலம், அரூர் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், அரசு அலு-வலர்கள், ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலை நடைபெறும் பகு-தியில் முறையான தடுப்புக்கள் அமைக்க வில்லை.இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்-ளது.எனவே விரைவாக சாலை பணியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுரேஷ் குமார், பாப்பிரெட்டிப்பட்டி.






      Dinamalar
      Follow us