/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மக்களை தேடி மருத்துவ முகாம் பங்கேற்க கலெக்டர் அழைப்பு
/
மக்களை தேடி மருத்துவ முகாம் பங்கேற்க கலெக்டர் அழைப்பு
மக்களை தேடி மருத்துவ முகாம் பங்கேற்க கலெக்டர் அழைப்பு
மக்களை தேடி மருத்துவ முகாம் பங்கேற்க கலெக்டர் அழைப்பு
ADDED : ஆக 24, 2024 01:29 AM
தர்மபுரி, தர்மபுரியில் நடக்கும், மக்களை தேடி மருத்துவ முகாமில் பங்கேற்ற வேண்டும் என, மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில், மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்படி, மாவட்டம் முழுவதும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டத்தில் நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் முகாம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான முகாம் நடத்தப்பட உள்ளது.
வரும், 28 காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடத்தப்படுகிறது. மேலும், 28 அன்று பகல், 2:30 மணிக்கு காரிமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில், கள ஆய்வில் இருக்கும் மாவட்டத்தின் முதல்நிலை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு அரசு திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு சேர்த்தல் தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.