/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஜல்லி பெயர்ந்து தார்ச்சாலை சேதம்: சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
ஜல்லி பெயர்ந்து தார்ச்சாலை சேதம்: சீரமைக்க மக்கள் கோரிக்கை
ஜல்லி பெயர்ந்து தார்ச்சாலை சேதம்: சீரமைக்க மக்கள் கோரிக்கை
ஜல்லி பெயர்ந்து தார்ச்சாலை சேதம்: சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 14, 2024 02:18 AM
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, ஜல்லி பெயர்ந்து, மண் சாலையாக மாறி வரும், தார்ச்சாலையை சீரமைக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, பாகலஹள்ளி பஞ்., சேர்ந்த விவசாயி மாதையன் என்பவர் கூறுகையில்,
''தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி பஞ்., எல்லையிலுள்ள குரும்பட்டி முதல் ஏலகிரி பஞ்., கடுதுகா-ரம்பட்டி வரையிலான, 3 கி.மீ., சாலை கடந்த, 10 ஆண்டுக-ளுக்கு முன் போடப்பட்டது.
இச்சாலை வழியாக, பள்ளி, கல்லுாரி பஸ்கள், சரக்கு வாகனங்கள், விவசாயிகள் விளைவிக்கும் காய்க-றிகள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் என, அதிகளவில் சென்று
வருகின்றன.
இதனால், இச்சாலை மிக விரைவில் சேதமாகி, ஜல்லி கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறி வருகிறது.
இது குறித்து, பாகலஹள்ளி பஞ்., நிர்வாகம், நல்லம்பள்ளி பி.டி.ஓ., அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இச்சாலையில், சிறிய ரக வாகனங்கள் கூட செல்ல முடி-யாத அளவிற்கு மிகவும் மோசமாக மாறியுள்ளது. இச்சாலையை உடனடியாக சீரமைத்து கொடுக்க வேண்டும்,'' என்றார்.