/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பால் கொள்முதல் விலை குறைப்பை கைவிட கோரிக்கை
/
பால் கொள்முதல் விலை குறைப்பை கைவிட கோரிக்கை
ADDED : ஆக 10, 2024 07:01 AM
தர்மபுரி: 'ஆவின் மூலம், கிராமபுறங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலிற்கான விலை குறைப்பை கைவிட வேண்டும்' என, தமிழ்-மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பிரதாபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில், பிரதான தொழிலாக வேளாண்மை, இதன் உப தொழிலாக, கால்நடை வளர்ப்பை விவசாய தொழி-லாளர்கள் செய்து வருகின்றனர். தர்மபுரி,- கிருஷ்ணகிரி என, தனித் தனியாக பிரித்து, தர்மபுரி பால் கூட்டுறவு ஒன்றியத்தின், 250 க்கும் மேற்பட்ட பால் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆவின் ஒன்றியம் தர்மபுரி மாவட்டம் முழுவதும், கிராம புறங்-களில் சிறிய அளவிலான பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைத்து, தினமும், 1.20 லட்சம் லிட்டருக்கு மேல், பால் கொள்முதல் செய்து வருகிறது.
இதை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், கிராமப்புற கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதலை குறைத்து வருவதுடன், பால் தரம் இல்லை என, விலை குறைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, பால் உற்பத்தி செய்து வரும் விவசாய தொழிலாளர்கள் கடுமை-யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்ட நிர்வாகம், பரிசீலனை செய்து, பால் கொள்-முதல் விலையை குறைக்காமல், நிபந்தனையின்றி பால் கொள்மு-தலை தொடர செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.