/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின் இணைப்புகளில் ஆர்.சி.டி., சாதனம் பொருத்த வலியுறுத்தல்
/
மின் இணைப்புகளில் ஆர்.சி.டி., சாதனம் பொருத்த வலியுறுத்தல்
மின் இணைப்புகளில் ஆர்.சி.டி., சாதனம் பொருத்த வலியுறுத்தல்
மின் இணைப்புகளில் ஆர்.சி.டி., சாதனம் பொருத்த வலியுறுத்தல்
ADDED : செப் 06, 2024 01:21 AM
அரூர், மின்விபத்துக்களால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தடுக்க, ஆர்.சி.டி., சாதனத்தை அனைத்து மின்நுகர்வோர்களும் மின் இணைப்பில் பொருத்த வேண்டும் என, அரூர் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மழைக்காலங்களில் பெரும்பாலும் மின் இணைப்புகள் பழுது மற்றும் மின்கசிவினால் ஏற்படும் மின் விபத்துக்களால் உண்டாகும் மனித உயிரிழப்புகளை தடுக்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார பகிர்மான தொகுப்பு, 16-2ஏ படி புதிய மின் இணைப்பு பெறுபவர்கள் ஆர்.சி.டி., என்றழைக்க கூடிய உயிர்காக்கும் சாதனத்தை தங்களுடைய மின் இணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின்விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, அரூர் கோட்டத்தில் புதிய மின்நுகர்வோர் மட்டுமல்லாது, தற்போதுள்ள அனைத்து மின் நுகர்வோர்களும், ஆர்.சி.டி., என்ற உயிர்காக்கும் சாதனத்தை தங்களின் வீடு, கடைகள், விவசாய பம்பு செட்டுகள் மற்றும் அனைத்து மின் இணைப்புகளில் பொருத்தி மின்விபத்தை தவிர்க்குமாறும் குறிப்பாக, சித்தேரி மலை, சிட்லிங், கோட்டப்பட்டி பகுதி அடர்ந்த வனப்பகுதி மற்றும் மலைகளாக உள்ளதால், அப்பகுதி மக்கள் அதிக கவனமுடன் இருந்து அரூர் கோட்டத்தை மின் விபத்து இல்லா கோட்டமாக அமைய அனைத்து நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் ஆர்.சி.டி., சாதனத்தை பொருத்தி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.