/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஜல்லி பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி
/
ஜல்லி பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 24, 2024 01:32 AM
பாப்பாரப்பட்டி, ஆக. 24-
தர்மபுரி அருகே, ஜல்லி பெயர்ந்த நிலையில் உள்ள தார்ச்சாலையால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த மலையூரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், பிரசித்தி பெற்ற கோபாலசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, பாப்பாரப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பாப்பாரப்பட்டியில் இருந்து, மலையூர் கோபால சுவாமி கோவில் வரை, 11 கி.மீ., துாரத்துக்கு தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையின் பல இடங்களில், ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க கோரி, அதிகாரிகளுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

