ADDED : ஆக 06, 2024 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கெலமங்கலம் கிராம தேவதை பட்டாளம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய், நொடியின்றி மக்கள் வாழவும், மகா சண்டியாகம் நேற்று நடந்தது.
முன்னதாக, கோவில் அர்ச்சகர் சீனிவாஸ் முன்னிலையில், அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் கமிட்டி நிர்வாகி சென்னபசப்பா, டவுன் பஞ்., தலைவர் தேவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.