/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோட்டப்பட்டி - சிட்லிங் சாலைப்பணி விரைவில் மேற்கொள்ளப்படும்: கலெக்டர்

ADDED : ஆக 15, 2024 01:22 AM
அரூர், அரூர் அடுத்த ஆவாலுாரில், நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இதில், 188 பயனாளிகளுக்கு, இலவச வீட்டுமனைப்பட்டா, திருமண உதவி தொகை, இயற்கை மரண உதவி தொகை உள்ளிட்ட, 1.15 கோடி ரூபாய் மதிப்பில், கலெக்டர் சாந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ''பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை படிக்க வைத்து, போட்டித் தேர்வுகள் எழுதி அரசு பணிக்கு செல்ல ஊக்கம் அளிக்க வேண்டும்.
தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய, 5 மாவட்டங்களை இணைக்கும் வகையில், செலம்பை முதல் கண்ணுார் சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோட்டப்பட்டி முதல் சிட்லிங் வரை சாலை அமைக்க, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடமிருந்து அறிக்கை பெற்று, சாலைப்பணி விரைவில் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
முன்னதாக மொண்டுக்குழியிலுள்ள ரேஷன் கடையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். முகாமில், அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார், ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.