/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மேற்கு மண்டல ஐ.ஜி., தலைமையில் சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டம்
/
மேற்கு மண்டல ஐ.ஜி., தலைமையில் சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டம்
மேற்கு மண்டல ஐ.ஜி., தலைமையில் சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டம்
மேற்கு மண்டல ஐ.ஜி., தலைமையில் சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 25, 2024 01:28 AM
மேற்கு மண்டல ஐ.ஜி., தலைமையில்
சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டம்
தர்மபுரி, ஆக. 25-
மேற்கு மண்டல ஐ.ஜி.,யாக புதிதாக பொறுப்பேற்றுள்ள செந்தில்குமார் தலைமையில், சேலம் டி.ஐ.ஜி., உமா முன்னிலையில், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன், தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், ஐ.ஜி., செந்தில்குமார், தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள், கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனையை தடுத்தல், சாலை விபத்தை குறைப்பது, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், விநாயகர் சதுர்த்தியின்போது, சிலைகள் வைப்பது மற்றும் நீர்நிலைகளில் கரைப்பது, நிலுவையிலுள்ள வழக்குகளில் விரைவில் இறுதி அறிக்கை தயார் செய்து, நீதிமன்றத்திற்கு அனுப்புவது, பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை விரைவில் எடுப்பது தொடர்பாக, அறிவுரைகள் வழங்கி பேசினார்.
முன்னதாக, நேற்று காலை, 6:30 மணிக்கு தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடந்த, வாராந்திர கவாத்து அணி வகுப்பை பார்வையிட்டார். தொடர்ந்து, போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார்.