/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் அச்சல்வாடியில் சேவை துவக்கம்
/
நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் அச்சல்வாடியில் சேவை துவக்கம்
நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் அச்சல்வாடியில் சேவை துவக்கம்
நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் அச்சல்வாடியில் சேவை துவக்கம்
ADDED : ஆக 31, 2024 12:54 AM
அரூர்: தர்மபுரி மாவட்டத்திற்கு, 6 நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் சேவையை கலெக்டர் சாந்தி துவக்கி வைத்தார். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இந்த வாகனங்களில் உள்ளன. கால்நடை மருந்தகங்கள் இல்லாத கிராமங்களுக்கு சென்று, மருத்துவ சேவைகளை வழங்க உள்ளன. கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி செலுத்துதல், நோய் பாதித்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் நேற்று அரூர் அடுத்த அச்சல்வாடி கிராமத்திற்கு வந்த நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வரவேற்பு அளித்தனர். வெள்ளிக்கிழமை தோறும் காலை,
9:00 மணிக்கு அச்சல்வாடி பகுதிக்கு இந்த வாகனம் வரும் எனவும், கால்நடை வளர்ப்போர் இதன் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.