/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்
/
புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்
ADDED : செப் 04, 2024 10:10 AM
காரிமங்கலம்: உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலு-வலர் பானுசுஜாதா, பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன், காரிமங்கலம் இன்ஸ்-பெக்டர் பார்த்திபன் ஆகியோர், புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, சோதனை மேற்-கொள்ள உத்தரவிட்டனர். அதன்படி, காரிமங்-கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காரி-மங்கலம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்-டனர்.
காரிமங்கலம் மொரப்பூர் ரோடு, கரகப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, ஒரு மளிகை கடை மற்றும் பாலக்கோடு சாலை, பொம்மஹள்ளி கூட்ரோடு அருகில், ஒரு மளிகை கடையில் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அக்க-டைகளுக்கு தலா, 25,000 ரூபாய் அபராதம், 15 நாட்கள் கடை இயங்க தடை விதிக்கப்பட்டது.