/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
திட்டங்கள் வழங்குவதில் அரூருக்கு முன்னுரிமை:தி.மு.க.,-எம்.பி.,
/
திட்டங்கள் வழங்குவதில் அரூருக்கு முன்னுரிமை:தி.மு.க.,-எம்.பி.,
திட்டங்கள் வழங்குவதில் அரூருக்கு முன்னுரிமை:தி.மு.க.,-எம்.பி.,
திட்டங்கள் வழங்குவதில் அரூருக்கு முன்னுரிமை:தி.மு.க.,-எம்.பி.,
ADDED : ஜூலை 20, 2024 07:23 AM
அரூர் : தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க.,-எம்.பி., மணி, நேற்று அரூர் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட நான்குரோடு, பஸ் ஸ்டாண்ட், கச்சேரிமேடு உள்ளிட்ட இடங்களில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
அரூர் தொகுதி இல்லையென்றால், தர்மபுரி லோக்சபா தொகு-தியில் நாம் வெற்றி பெற்றிருக்க முடியாது. ஆகவே, அரூர் தொகுதி மக்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுத்து, எந்தெந்த அரசு திட்டங்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டுமோ, நிச்-சயம் சேர்ப்பேன். தமிழக முதல்வரும் அரூர் பகுதிக்கு முன்னு-ரிமை கொடுத்து அந்த மக்களுடைய குறைகளை நிறைவேற்று-கின்ற வகையில், உங்கள் பணி இருக்க வேண்டுமென கூறி-யுள்ளார். உங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் பொது-மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை என்னிடம் வழங்கலாம். மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முழு முயற்சி-யுடன் பாடுபடுவேன்.
இவ்வாறு பேசினார்.
தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ண-மூர்த்தி, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி-யினர் கலந்து கொண்டனர்.