/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு
/
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு
ADDED : ஆக 25, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு
நல்லம்பள்ளி, ஆக. 25-
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், வெங்கட்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு, 2024 - 2026 புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், 24 உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்து, அதில், பள்ளி மேலாண்மை குழு தலைவராக, இளந்துரை, துணை தலைவராக பொன்னியம்மாள் ஆகியோரை தேர்தெடுத்தனர். மேலும், உறுப்பினராக தலைமை ஆசிரியர் இளங்கோவன், முன்னாள் மாணவர் அன்பழகன் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் சான்றிதழ் வழங்கபட்டது.

