/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் அரசை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
/
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் அரசை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் அரசை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் அரசை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
ADDED : செப் 08, 2024 12:59 AM
தர்மபுரி, செப். 8-
தமிழகத்தில், 2012 முதல், 13 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும், 12,000 பேருக்கு, தி.மு.க., 2016 மற்றும் 2021ல் அளித்த தேர்தல் வாக்குறுதி படி, பணி நிரந்தரம் செய்ய வேண்டி, தமிழகம் தழுவிய கையெழுத்து இயக்கம் நேற்று தர்மபுரியில் தொடங்கப்பட்டது.
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். மகளிரணி ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தி ரம்யா தீர்மானம் குறித்து பேசினர்.
இது குறித்து, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
தி.மு.க., அரசு, 2016 சட்டசபை தேர்தலின் போது, அறிவித்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கருணாநிதியை போலவே, முதல்வர் ஸ்டாலின், 2021 சட்டசபை தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் என்ற வாக்குறுதி கொடுத்தார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் தர்மபுரி, மயிலாடுதுறை, கன்னியாகுமரியில் பகுதிநேர ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய ஸ்டாலின், தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 100 நாளில் பணி நிரந்தரம் செய்வேன் என்றார். இந்த வாக்குறுதியை நம்பி, 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் காத்திருக்கிறோம். ஏற்கனவே, 10,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு, பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்த, தி.மு.க., அரசு, 2024 முதல், 2,500 ரூபாய் சம்பள உயர்வு மட்டுமே கொடுத்துள்ளது. மே மாத சம்பளத்துடன், அனைத்து வேலை நாட்களிலும் முழுநேர வேலை வழங்கி, 13 ஆண்டுகளாக செய்கின்ற வேலையை முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரத்தை பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களில் பணிபுரியும் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.