/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இளம்பெண் மாயமானதால் ஆத்திரம் காதலனின் தாயை கடத்திய கும்பல்
/
இளம்பெண் மாயமானதால் ஆத்திரம் காதலனின் தாயை கடத்திய கும்பல்
இளம்பெண் மாயமானதால் ஆத்திரம் காதலனின் தாயை கடத்திய கும்பல்
இளம்பெண் மாயமானதால் ஆத்திரம் காதலனின் தாயை கடத்திய கும்பல்
ADDED : ஆக 16, 2024 12:58 AM
மொரப்பூர், அரூர் அருகே, இளம்பெண் மாயமான நிலையில், காதலனின் தாயை கடத்திச்சென்ற, 16 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த கீழ்மொரப்பூரை சேர்ந்தவர் சுரேந்தர், 25; பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மொரப்பூர் அருகேயுள்ள கணபதிப்பட்டியை சேர்ந்தவர் பவித்ரா, 23; இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்தனர். கடந்த, 13ம் தேதி இரவு, வீட்டிலிருந்த பவித்ரா மாயமானார். அதேபோல் சுரேந்தரும் காணாமல் போனார்.
இதனால் மகளை சுரேந்தர் கடத்தியிருக்கலாம் என்று நினைத்த பவித்ராவின் தந்தை பூபதி, தாய் செல்வி, அண்ணன் பொன்னரசு, 30, உறவினர்கள் கலையரசன், 35, வேலு, 30, சரவணன் உள்ளிட்ட, 16 பேர் நேற்று முன்தினம் காலை, சுரேந்தர் வீட்டுக்கு சென்றனர். அங்கு சுரேந்தரின் தந்தை செல்வம், அவரது தாய் முருகம்மாள், உறவினர்கள் சுப்பிரமணி, அங்கம்மாள் இருந்தனர். அவர்களிடம் பவித்ரா எங்கே எனக்கேட்டு தகாத வார்த்தை பேசி தாக்கியுள்ளனர். முருகம்மாளை பைக்கில் கடத்தி சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம், மொரப்பூர் போலீசில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் பவித்ராவின் பெற்றோர் உள்ளிட்ட, 16 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் கணபதிப்பட்டி வனப்பகுதியில் முருகம்மாளை போலீசார் மீட்டனர். அவர் போலீசாரிடம் கூறுகையில், ''பவித்ரா எங்கே எனக்கேட்டு தொந்தரவு செய்தனர். எனக்கு தெரியாது என கூறியதால், விட்டு விட்டு சென்று விட்டனர்,'' என்று தெரிவித்துள்ளார்.

