/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
ADDED : ஆக 23, 2024 01:23 AM
தர்மபுரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஊரக வளர்ச்சித்துறையில் அனைத்து நிலை காலிபணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற, போதுமான ஊழியர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு, விடுபட்ட உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர்கள், மாவட்ட, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பணிவரன்முறை செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திற்கு, தனி ஊழியர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். 10 ஆண்டுகள் பணிமுடித்த தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் பதிவறை எழுத்தர் நிலையில் உள்ளவர்களுக்கு, பணிவரன் முறைப்படுத்த வேண்டும். கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட, அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்
களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். இணை இயக்குனர் பணியிடங்களில், ஆட்சிப்பணி அலுவலர்கள் நிலையில் மேற்கொள்ளும் பணி நியமனங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட, 20 -அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால், அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடியது.
* தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தால், நேற்று அலுவலர்கள் யாரும் வரவில்லை. அதனால், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பூட்டப்பட்டிருந்து. பல்வேறு பணிகளுக்காக கிராமங்களில் இருந்த வந்த பொதுமக்கள் அலுவலகம் பூட்டியிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.