/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீர்த்தமலையை ஒன்றியமாக அறிவிக்க வலியுறுத்தல்
/
தீர்த்தமலையை ஒன்றியமாக அறிவிக்க வலியுறுத்தல்
ADDED : செப் 01, 2024 05:08 AM
அரூர்: அரூர் கிழக்கு ஒன்றிய, தி.மு.க., பொது உறுப்பினர்கள் ஆலோ-சனை கூட்டம், தீர்த்தமலையில் நடந்தது. ஒன்றிய அவைத்த-லைவர் ஜெய்னுலாப்தீன் தலைமை வகித்தார். ஒன்றிய செய-லாளர் சந்திரமோகன் வரவேற்றார். மேற்கு மாவட்ட செய-லாளர் பழனியப்பன் கட்சி பணிகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், தீர்த்தமலை பகுதிக்கு எண்ணற்ற திட்டங்களை அறி-வித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், தீர்த்தம-லையை ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும். அரூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்.,ல் தலா, ஒரு சமுதாயக்-கூடம் அமைத்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தீர்மான குழு செயலாளர் விஸ்வ-நாதன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் ரஜினிமாறன், பழனி, உமாபதி, மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.