நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட காந்தி நகரில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்ப-குதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து, மேல்நிலை நீர்த்-தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் நடந்தது. இந்நி-லையில் ஆழ்துளை கிணற்றிலுள்ள மின்மோட்டார் பழுதால் கடந்த, 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் பாதித்துள்ளது. மேலும், ஒகேனக்கல் குடிநீர் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி படுகின்றனர். பழுதான மின்மோட்டாரை சரி-செய்து முறையாக குடிநீர் வழங்க, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

