ADDED : பிப் 28, 2025 01:28 AM
100 நாள் பணியாளர்கள் தர்ணா
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. போராட்ட சங்க ஒருங்கிணைப்பாளர் பிரதாபன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் மாதையன், அலமேலு உட்பட பலர் முன்னிலை வகித்தனர். கடந்த, 3 மாதங்களாக பணி செய்த கிராமப்புற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தின சம்பளம், 2,118 கோடி ரூபாய், மத்திய நிதி நிலை அறிக்கையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின், 4.50 லட்சம் கோடி ரூபாய், தமிழ்நாடு கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய, 2,152 கோடி ரூபாய் ஆகிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும். 10 கிராம பஞ்.,களை நகராட்சி, பேரூராட்சியுடன் இணைப்பதை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் பணி முடித்த பணிதள பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

