ADDED : பிப் 18, 2025 12:50 AM
அ நிறம் | அளவு
ரூ.15 லட்சத்திற்குஆடு விற்பனை
எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு முட்டாஞ்செட்டி, நவலடிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று பவித்திரத்தில் நடந்த சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்தது. இதனால், 15 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
