/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
/
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
ADDED : செப் 05, 2024 03:27 AM
தர்மபுரி: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா, 9 ஆசிரியர்கள் என மொத்தம், 18 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விரு-துக்கு தேர்வாகி உள்ளனர்.
ஆர்.ஆனந்தன், 52, தலைமை ஆசிரியர், அரசு உயர் நிலைப்-பள்ளி, தாதநாயக்கன்பட்டி: எம்.ஏ., பி.எட்., எம்.பில்., படித்த இவர், 2002ல் பட்டதாரி ஆசிரியராக, முத்தம்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியில் பணிக்கு சேர்ந்தார். 2020 முதல் தர்மபுரி மாவட்டம், தாதநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். அவர் கூறுகையில், ''நல்லாசி-ரியர் விருதுக்கு என்னை பரிந்துரைத்தவர்கள், கடந்த, 22 ஆண்டு ஆசிரியர் பணியில் எனக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், துறை சார்ந்த அலுவலர்களுக்கு நன்றி,'' என்றார்.வி.புகழேந்தி, 41, கணிணி பயிற்றுனர் அரசு மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி: எம்.எஸ்சி., எம்.எட்., எம்.பில்., படித்துள்ள இவர், கடந்த, 2012ல் கணிணி பயிற்றுனராக இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிக்கு சேர்ந்தார். அவர் கூறு-கையில், ''மரக்கன்று நடும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், என்.எஸ்.எஸ்., சார்பில் மாவட்ட அளவில் எனக்கு கிடைத்த விருதை, பள்ளிக்கும், என் மாணவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்,'' என்றார்.
கே.இராசகுமாரன், 45, தமிழ் ஆசிரியர், அரசு மாதிரி பள்ளி, தர்ம-புரி: எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி., தமிழ் புலவர் பயிற்சி, கல்-வெட்டு இயலில் பட்டயம் படித்துள்ள இவர், 2012ல் காரிமங்-கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆயிரியராக பணி நியமனம் பெற்றார். பாச்சுடர், பாவலர் மணி கவிமணி, கவிமா-மணி, கவிதை செம்மல் உட்பட, பல விருதுகள் பெற்றுள்ளார். தற்போது, தர்மபுரி அரசு மாதிரி பள்ளியில் தமிழாசிரியராக உள்ளார். அவர் கூறுகையில், ''ஆசிரியர் பணி அறப்பணி என்-பதை, நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்,'' என்றார்.
டி.சிவாஜி, 54, தலைமையாசிரியர், வகுத்துப்பட்டி ஊராட்சி ஒன்-றிய தொடக்கப்பள்ளி, கடத்துார் ஒன்றியம், தர்மபுரி மாவட்டம்: எம்.ஏ., பி.எட்., படித்துள்ள இவர், ஆசிரியர் பணியில் சேர்ந்து, 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இவர் கூறுகையில், ''பள்ளி கட்டமைப்பை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்தி உள்ளேன். பள்ளியில் மூலிகை தோட்டம் மற்றும் 'சிசிடிவி' கேமரா அமைத்துள்ளேன்,'' என்றார்.
அ.தமிழ்தென்றல், 49, முதுகலையாசிரியர், பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி மாவட்டம்: எம்.எஸ்சி., பி.எட்., எம்.பில்., முடித்து, முதுகலை தாவரவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர், ஆசிரியர் பணியில், 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இவர்,''நாட்டு நலப் பணித்-திட்ட அலுவலராக இருந்து, பல்வேறு சமூக பணிகள் மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன்,'' என்றார்.
டி.மணிவேல், 43, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி, கொங்குசெட்டிபட்டி, காரிமங்கலம்: எம்.ஏ., பி.எட்., படித்துள்ள இவர், கடந்த, 2009ல் கொங்குசெட்டிபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் பணி நியமனம் பெற்றார். 2016 - 2017ல் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றார். அவர் கூறு-கையில், ''ராதாகிருஷ்ணன் விருது என் பணியை, மேலும் வேகப்-படுத்த ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது,'' என்றார்.
சி.ராஜேந்திரன், 52, பட்டதாரி ஆசிரியர், மொட்டலுார் அரசு நடு-நிலைப்பள்ளி, காரிமங்கலம்: இவர், 2016 - 2017 ல் சிறந்த ஆசி-ரியருக்கான விருது, 2024 ல் கனவு ஆசிரியர் விருது பெற்-றுள்ளார். அவர் கூறுகையில், ''மாணவர்களை, சாரண சாரணி-யத்தில் உயரிய பயிற்சியை அளித்த, இதுவரை, 40 பேருக்கு கவர்னர் விருதை பெற்று கொடுத்துள்ளேன்,'' என்றார்.
அமலா செபஸ்டியன், 52, ஆக்ஸிலியம் மெட்ரிக் பள்ளி முதல்வர், ஆட்டுகாரம்பட்டி, தர்மபுரி: எம்.ஏ., பி.எட்., படித்-துள்ள இவர், ஆசிரியராக, 7 ஆண்டுகளும், தலைமை ஆசிரிய-ராக, 19 ஆண்டுகளும் பணியாற்றி உள்ளார். தர்மபுரி அடுத்த ஆட்டுகாரம்பட்டியிலுள்ள, ஆக்ஸிலியம் மெட்ரிக் தனியார் பள்ளி முதல்வராக உள்ளார். அவர் கூறுகையில், ''இவ்விருது பெற்றதின் மூலம், தர்மபுரி மாவட்டத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,'' என்றார்.
சி.தங்கராஜ், 52, நெருப்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், ஏரியூர், தர்மபுரி: எம்.ஏ., பி.எட்., படித்துள்ள இவர், தற்போது நெருப்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரி-யராக உள்ளார். அவர் கூறுகையில், ''ஏழை விவசாய குடும்-பத்தில் பிறந்து, மிகவும் கடினமான சூழலில் படித்து ஆசிரியர் பணிக்கு சேர்ந்தேன். தொடர்ந்து, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக அனைத்து பணிகளையும் செய்து வருகிறேன். தொடர் உழைப்பிற்கு கிடைத்த விருது, மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
யு.வெங்கடேஸ்வரா, 56, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குட்டூர், பர்கூர் சரகம், கிருஷ்ணகிரி மாவட்டம்: எம்.ஏ., பி.எட்., படித்துள்ள இவர், கடந்த, 1990ல், கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியை துவக்கினார். 1997ல் கெலமங்கலம் அடுத்த துளுவபெட்டா அரசு துவக்கப்பள்-ளியில் பணியில் சேர்ந்தார். 2013ல் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று, குட்டூர் அரசு துவக்கப்பள்ளியல் பணியாற்றி வரு-கிறார். பகுதி நேர ஆசிரியர் பயிற்றுனராகவும் பணியாற்றும் அவர், ''எனக்கு கிடைத்த நல்லாசியர் விருது, மாணவர்களுக்கு நான் ஆற்றும் சேவையை, தொடர்ந்து உத்வேகத்துடன் செய்ய உதவும்,'' என்றார்.
ஆர்.ஜெயஷீலா, இடைநிலை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநி-லைப்பள்ளி, சீனிவாசபுரம், பர்கூர் சரகம், கிருஷ்ணகிரி மாவட்டம்: எம்.ஏ., பி.எட்., எம்.பில்., படித்துள்ள அவர், 1997ல், மேல்கொட்டாய் அரசுப்பள்ளியில் ஆங்கில ஆசிரியை-யாக பணியை துவங்கினார். புதுார் பாரண்டப்பள்ளி துவக்கப்-பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு கிடைத்தது. இடை-நிலை ஆசிரியராக மீண்டும் பதவி உயர்வு பெற்று, கடந்த, 16 ஆண்டுகளாக சீனிவாசபுரம் நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் அவர், ''அனைத்து ஆசிரியர்களுமே சிறந்த ஆசிரியர்கள்தான். என் பணியின் சிறப்பான தருணங்களில் இந்த விருது கிடைத்தி-ருப்பதும் அடங்கும், என் பணி தொடரும்,'' என்றார்.
ஜி.தங்கம், 55, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடு
நிலைப்பள்ளி, மரிமானப்பள்ளி, பர்கூர் சரகம், கிருஷ்ணகிரி மாவட்டம்: எம்.ஏ., எம்.எட்., எம்.பில்., பி.ஜி.டி.சி.ஏ., படித்-துள்ள இவர், கடந்த, 1996 முதல் பர்கூரிலுள்ள தனியார் பள்-ளியில், 15 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றி உள்ளார். அப்-போது மெட்ரிக் அசோசியேஷன் சார்பில், மாநில அளவில் சிறந்த முதல்வர், சிறந்த பணிக்காக தொண்டு நிறுவனங்களின் மூலம் மாநில விருது பெற்றுள்ளார். கடந்த, 2010ல், மரிமானப்பள்ளி ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரி-யராக பணியாற்றி வரும் அவர், ''தமிழக அரசின் விருது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதால், இளமை, துடிதுடிப்புடன் இருப்ப-தாக உணர்கிறேன்,'' என்றார்.
எஸ்.சாமுண்டீஸ்வரி, 51, உடற்கல்வி ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, போச்சம்பள்ளி: இவர், உடற்கல்வி ஜீவ-ஜோதி விருது, இரு முறை வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்-றுள்ளார். இவர் கூறுகையில், ''கடந்த, 14 ஆண்டுகளாக உடற்-கல்வி ஆசிரியராக பணி செய்கிறேன். பள்ளியில் ஒவ்வோர் ஆண்டும், 100 மாணவியரை ஹாக்கி, தேக்வாண்டா, தடகளம், சிலம்பம் என, மாநில போட்டிகளில் பங்கேற்க செய்து, அதில் பல மாணவியர் மாநில, தேசிய அளவிலான அணிகளுக்கு தேர்-வாகி உள்ளனர்,'' என்றார்.
ரா.ஸ்வர்ணா, பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஜூஜூவாடி, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்: எம்.ஏ., எம்.பில்., பி.எட்., படித்துள்ள இவர், கடந்த, 2012ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். அவர் கூறுகையில், ''பள்ளியில் தேசிய பசுமை படை பொறுப்பாசிரியராக இருந்து, மரம் வளர்த்தல், காய்கறி, மூலிகை தோட்டம், பூங்கா அமைத்தல் ஆகிய பணிகளை செய்துள்ளேன். 2018ல் மாணவர்களுக்கு கியூஆர் கோடு மற்றும் புதிய தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி கற்பிக்க, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், என் சொந்த செலவில் ஸ்மார்ட் கிளாஸ் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளேன்,'' என்றார்.
ஒய்.நாராயணப்பா, முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்-பள்ளி, நல்லுார், ஓசூர். கிருஷ்ணகிரி மாவட்டம்: எம்.எஸ்சி., பி.எட்., எம்.பில்., பி.ஜி.டி.சி.ஏ., படித்துள்ள இவர், கடந்த, 2004ல் பட்டதாரி ஆசிரியராக ஜவளகிரி அரசு உயர்நிலைப்பள்-ளியில் சேர்ந்தார். கடந்த, 2004 முதல், நல்லுார் அரசு மேல்நி-லைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக உள்ளார். இவர் கூறு-கையில், ''தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி-யிலிருந்து, வகுப்பறைகள், கழிவறைகள் கட்ட முயற்சி எடுத்-துள்ளேன்,'' என்றார்.
சி.பிரபா, பட்டதாரி ஆசிரியர், அரசு உருது மேல்நிலைப்பள்ளி, சீத்தாராம் மேடு, ஓசூர். கிருஷ்ணகிரி மாவட்டம்: எம்.ஏ., பி.எட்., படித்துள்ள அவர், 2005 பிப்., 9 ல், நாகமங்கலம் அரசு துவக்கப்பள்ளியில் ஆசிரியர் பணியை துவக்கினார். கடந்த, 2014 செப்., 3 முதல், ஓசூர் அரசு உருது மேல்நிலைப்பள்ளியில் பணி-யாற்றி வருகிறார். அவர் கூறுகையில், ''தொடர்ந்து, 2 ஆண்டுக-ளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அறிவியல் ஆய்வில், இரு மாணவர்கள் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற செய்-துள்ளேன். உலகலாவிய ஆசிரியர்களுக்கான ஒலிம்பியாட் தேர்வில் முதல், 20 இடத்திற்குள் தேர்வாகி இருக்கிறேன்,'' என்றார்.
வெ.நாகராஜூ, தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்-பள்ளி, சின்ன உப்பனுார், தளி சரகம், கிருஷ்ணகிரி மாவட்டம்: எம்.ஏ., பி.எட்., படித்துள்ள இவர், கடந்த, 1999ல் தளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியர் பணியை துவக்கினார். கடந்த, 2008ல், தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று, சின்ன உப்பனுார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். அவர் கூறு-கையில், ''பள்ளிக்கான வகுப்பறை, கழிவறை போன்றவை, தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள
நடவடிக்கை எடுத்தேன்,'' என்றார்.
கே.விஜயகுமார், 43, ஆசிரியர், கே.திப்பனப்பள்ளி, பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி.