/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தந்தத்திற்காக யானை வேட்டை தடுக்க தவறிய 2 பேர் 'சஸ்பெண்ட்'
/
தந்தத்திற்காக யானை வேட்டை தடுக்க தவறிய 2 பேர் 'சஸ்பெண்ட்'
தந்தத்திற்காக யானை வேட்டை தடுக்க தவறிய 2 பேர் 'சஸ்பெண்ட்'
தந்தத்திற்காக யானை வேட்டை தடுக்க தவறிய 2 பேர் 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 08, 2025 01:20 AM
பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம், ஏமனுார் வனக்காவல், கோடுபாய் கிணறு வனப்பகுதியில், மார்ச், 1ல் யானை ஒன்று இறந்து கிடப்பதாக பென்னாகரம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில், பென்னாகரம் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர்.
அதில், இறந்தது ஆண் யானை என்பதும், யானை வேட்டையாடப்பட்டு, தும்பிக்கை தனியாகவும், உடல் எரிக்கப்பட்ட நிலையில் முகம் சிதைந்தும், தந்தங்கள் இன்றி காணப்பட்டதும் தெரியவந்தது. பென்னாகரம் வனத்துறையினர் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், யானை வேட்டையை தடுக்க தவறியதாக, நெருப்பூர் பிரிவு வனவர் சக்திவேல், ஏமனுார் பீட் வனக்காப்பாளர் தாமோதரன் ஆகிய இருவரையும், சஸ்பெண்ட் செய்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவிட்டார். மேலும், மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் தலைமையில், மூன்று தனிக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.