/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓடும் பஸ்சில் 3 பவுன் நகை திருடிய 2 பெண்கள் கைது
/
ஓடும் பஸ்சில் 3 பவுன் நகை திருடிய 2 பெண்கள் கைது
ADDED : ஜூன் 14, 2024 01:28 AM
தர்மபுரி,
ஓடும் பஸ்சில், மூன்று பவுன் நகையை அபேஸ் செய்த, இரு பெண்களை, போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் செக்கோடியை சேர்ந்தவர் காவேரியம்மாள், 60; இவர் நேற்று முன்தினம் மதியம், 2 மணிக்கு, மகேந்திரமங்கலத்தில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு செல்ல, கடகத்துாரில் பேத்தியுடன் பஸ் ஏறியுள்ளார்.
பஸ் சென்று கொண்டிருந்த போது, பின் சீட்டில் அமர்ந்திருந்த, இரு பெண்கள், காவேரியம்மாளின் கழுத்திலிருந்த, 3 பவுன் செயினை திருடியுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த காவேரியம்மாள், பஸ்சில் இருந்தவர்களின் உதவியுடன், நகையை திருடிய, இரு பெண்களையும் பிடித்து, பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில், நகையை திருடியவர்கள், வேலுார் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த மாதவி, 36, ஜோதி, 40 என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள், இருவரையும் கைது செய்தனர்.