ADDED : மே 30, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி எஸ்.ஐ., ரோஜாரமணி மற்றும் போலீசார் மது விலக்கு சம்பந்தமாக அம்மாபாளையம் பகுதியில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது பதிவு எண் இல்லாத பைக்கில் வந்த அம்மாபாளையத்தை சேர்ந்த அரங்கனார், 37, ஜெயராமன், 52, ரவி, 51, ஆகியோரை சோதனை செய்தனர். இதில் கூடுதல் விலைக்கு விற்க மது பாட்டில்கள் வாங்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்து, 21 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.