ADDED : மே 10, 2024 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்;அரூர் அடுத்த சிட்லிங் பஞ்., மலைதாங்கி கோரையாற்றில் அதே பகுதியை சேர்ந்த நவீன், 28, நடராஜ், 50, மேல்தண்டா சுரேஷ், 37, ஏ.கே.தண்டா ராஜேஷ், 33, ஆகிய, 4 பேரும் பொக்லைன் வாகனம் மூலம் டிராக்டர் டிரைலரில், ஒன்றரை யூனிட் மணலை கடத்தி வந்து, நடராஜ் வீட்டின் அருகில் கொட்டி வைத்திருந்தனர்.
இது குறித்து சிட்லிங் வி.ஏ.ஓ., ராஜேந்திரன் புகார்படி, கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து நடராஜ், சுரேஷ், ராஜேஷ் ஆகிய, 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, டிராக்டர் டிரைலர், பொக்லைன் வாகனம் மற்றும் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.