ADDED : ஜூன் 28, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் தாலுகா அலுவலகத்தில், கடந்த, 25ல் ஜமாபந்தி துவங்கியது.
இதில், நேற்று தீர்த்தமலை வருவாய் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, நில அளவை செய்தல், புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக, 317 மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரும், அரூர் ஆர்.டி.ஓ.,வுமான வில்சன் ராஜசேகரிடம் அளித்தனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. தாசில்தார் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.