/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பிரியாணி கடை ஊழியர் கொலையில் 4 பேர் கைது
/
பிரியாணி கடை ஊழியர் கொலையில் 4 பேர் கைது
ADDED : ஜூலை 29, 2024 02:09 AM
தர்மபுரி: தர்மபுரி அடுத்த வி.ஜெட்டிஹள்ளியை சேர்ந்த முகமது ஆசிப், 25; இவர் இலக்கியம்பட்டியில் உள்ள பிரியாணி கடையில் பணி-யாற்றி வந்தார். கடந்த, 26 இரவு, 9:30 மணிக்கு கடையிலிருந்த போது, 4 பேர் கொண்ட கும்பல், அவரை கத்தியால் குத்தி கொன்று விட்டு தப்பியது. தர்மபுரி எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் படி, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன் தலைமை யில், 4 தனிப்படையினர் குற்ற-வாளிகளை தேடி வந்தனர்.
இதில், சேலம் மாவட்டம், ஓமலுார் அடுத்த செட்டிப்பட்டியை சேர்ந்த ஜனரஞ்சன், 27, ஜனஅம்சபிரியன், 27, கவுதம், 28 மற்றும் தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த சிவாடியை சேர்ந்த பரிதிவளவன், 24 ஆகிய, 4 பேரை போலீசார் கைது செய்-தனர். தொடர் விசாரணையில், கொலையான முகமது ஆசிப், கொலையாளிகளான ஜனரஞ்சன் மற்றும் ஜனஅம்சப்பிரியன் ஆகி-யோரது சகோதரியை காதலித்துள்ளார். இதனால் இக்கொலை நடந்துள்ளது தெரியவந்தது. கைது செய்த, 4 பேரரையும், தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், மாவட்ட சிறையில் அடைத்தனர்.
கைதான சிவாடியை சேர்ந்த பரிதிவளவன், இந்திய மூல நிவாசி காவல்படை மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவித்து மார்ச், 22 ல் ஆதரவு கடிதத்தை முதல்வர் ஸ்டாலினிடம் அளித்-தது குறிப்பிடத்தக்கது.