/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலையில் பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் கைது
/
சாலையில் பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் கைது
ADDED : ஆக 05, 2024 02:19 AM
தர்மபுரி,
தர்மபுரி அருகே, சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி டவுன் போலீஸ், எஸ்.ஐ., விஜயசங்கர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம், தர்மபுரி நகர பகுதி மற்றும் பழைய தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் ரோந்து சென்றனர். அப்போது காலை, 10:00 மணிக்கு பச்சினம்பட்டி கூட்ரோடு மேம்பாலம் அருகில், கடகத்துாரை சேர்ந்த மித்துன்ராஜ், 24 என்பவரின் பிறந்த நாளை அவருடைய நண்பர்களான, அருள்பாண்டி 22, மணி, 27, மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோர் கொண்டாட்டினர். அப்போது, சாலையில், பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தும் வகையில், யமஹா ஆர் 15 பைக்கில் வேகமாக ஓட்டியவாறு, பட்டாசுகளை வெடித்தனர். அதை மொபைலில் வீடியோவாக பதிவு செய்து வைரலாக்கினர். இது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, 4 இளைஞர்களை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர்.