/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காட்டு பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி முகம் சிதைந்த மாடு
/
காட்டு பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி முகம் சிதைந்த மாடு
காட்டு பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி முகம் சிதைந்த மாடு
காட்டு பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி முகம் சிதைந்த மாடு
ADDED : மே 04, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி : வேப்பனஹள்ளி அடுத்த சிகரமாகனபள்ளியை சேர்ந்தவர் ராஜசேகர், 50. இவர், 5 பசுமாடுகளை வளர்த்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை, பசுமாடுகளை வழக்கம் போல மேய்ச்சலுக்காக கிராமத்தின் வனப்பகுதியை ஒட்டியுள்ள, திம்மம்மா ஏரி பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாடு மேய்ச்சலில் இருந்த போது திடீரென பயங்கரமாக வெடி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து ராஜசேகர் சென்று பார்த்தபோது, அங்கே காட்டு பன்றிக்கு வைத்த வெடியில் மாடு வாய் வைத்ததில் பசுமாட்டின் முகம், வாய் வெடித்து சிதைந்தது.
வேப்பனஹள்ளி போலீசார், பன்றிக்கு வெடி வைத்தவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்