/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மான் இறைச்சி அறுத்தவருக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு
/
மான் இறைச்சி அறுத்தவருக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு
மான் இறைச்சி அறுத்தவருக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு
மான் இறைச்சி அறுத்தவருக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு
ADDED : மே 02, 2024 07:45 AM
பாப்பிரெட்டிப்பட்டி : பொம்மிடி கவர மலை காப்புக்காட்டு பகுதியில் ஏராளமான மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளன. பொம்மிடி -அரூர் சாலையிலுள்ள மெனசி குண்டல்மடுவு இருளர் காலனியை சேர்ந்த தீர்த்தகிரி மகன் அருள், 20, காப்புக்காட்டு பகுதியில் சிக்கிய பெண் மானை, காட்டின் வெளியே ரஞ்சித் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்று உள் பகுதியில் வைத்து இறைச்சி அறுத்துக் கொண்டிருந்தார்.
இதையறிந்த மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்த்குமார், வனவர் செந்தில்குமார், வனக்காப்பாளர்கள் அர்ச்சனா, ஸ்ரீராம், முருகன் ஆகியோர் அருளை பிடித்தனர். பின் அவரை தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முன்னிலையில் ஆஜர் செய்தனர். அவர் அருளுக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்தார்.