/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாய்க்காலில் குளிக்க சென்ற பெண் தவறி விழுந்து சாவு
/
வாய்க்காலில் குளிக்க சென்ற பெண் தவறி விழுந்து சாவு
வாய்க்காலில் குளிக்க சென்ற பெண் தவறி விழுந்து சாவு
வாய்க்காலில் குளிக்க சென்ற பெண் தவறி விழுந்து சாவு
ADDED : ஆக 09, 2024 02:52 AM
குளித்தலை: வாய்க்காலில் குளிக்க சென்ற பெண், தவறி விழுந்து இறந்தார்.
குளித்தலை அடுத்த, பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்.. தொட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை, 28, பஞ்சர் கடை வைத்துள்ளார். இவரது அக்கா லதா, 35. இவரது கணவர் செல்வராஜ். கடந்த, 5 காலை 7:00 மணியளவில் வாய்க்காலில் துணிகளை துவைப்பதற்காக, லதா சென்றார்.
மகிளிப்பட்டி கட்டளை மேட்டு வாய்க்காலில், துணி துவைத்து கொண்டிருந்தார். பின் அவர் குளிக்க சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவரை காணவில்லை. இந்நிலையில், மகிளிப்-பட்டி உடையான் தோட்டம் அருகே சடலமாக, நேற்று முன்-தினம் மாலை லதா கிடந்துள்ளார். போலீசார் சடலத்தை கைப்-பற்றி. உடல் கூறு ஆய்வுக்காக, குளித்தலை அரசு மருத்துவ-மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, லாலாபேட்டை போலீசார் விசாரணை செய்து
வருகின்றனர்.