/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்
/
கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்
கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்
கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்
ADDED : ஆக 30, 2024 05:05 AM
காரிமங்லகம்: 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், காரிமங்கலம் அடுத்த ராமியம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்-கத்தில், மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் பால் கொள்-முதல் மற்றும் தொகுப்பு பால் குளிர்விக்கும் மைய செயல்பா-டுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பால் உற்பத்தியாளர்க-ளுக்கு வழங்கப்படும் பட்டுவாடா, பால் உற்பத்தியாளர் கூட்டு-றவு சங்கம் மூலம் கலப்பு தீவனங்கள் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்கள் கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசிகள் செலுத்தி, கோமாரி நோய் போன்றவற்றி-லிருந்து கால்நடைகளை பாதுகாத்து, ஆவின் மூலம் வழங்கப்-படும் தீவனங்களை பயன்படுத்தி, தரமான பால் உற்பத்தி செய்ய, விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின், அருகிலிருந்த கால்நடை மருந்தகத்தை ஆய்வு செய்து, அங்கு கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் செய்த விபரம் மற்றும் செய்முறை கருவூட்டல், பசுந்தீவன உற்பத்தி செய்தல் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
அப்போது, காரிமங்கலம் தாசில்தார் கோவிந்தராஜ், ஊராட்-சிகள் உதவி இயக்குனர் மணிவாசகம், மகளிர் திட்ட உதவி அலு-வலர் சஞ்சீவிகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.